Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன?…. மதுரையில் இருக்கும் நடிகர் விஜயின் பாட்டிக்கு 103 வயது ஆகிறதா….? எஸ்ஏசி பகிர்ந்த அழகிய புகைப்படம் வைரல்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவருடைய தந்தை பிரபல இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர். ஒரு காலத்தில் முன்னணி இயக்குனராக வலம் வந்த எஸ்ஏ சந்திரசேகர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு சினிமாவில் நடக்கும் பிரச்சினை மற்றும் தன்னுடைய மகன் குறித்த கருத்துகளையும் எஸ்.ஏ சந்திரசேகர் அவ்வப்போது கூறி வருகிறார்.

இந்நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் மதுரையில் இருக்கும் தன்னுடைய சித்தியை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். அவருடைய சித்திக்கு தற்போது 103 வயது ஆகிறது. இந்த புகைப்படத்தை எஸ்.ஏ சந்திரசேகர் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர அதை ரசிகர்கள் தற்போது வைரல் ஆக்கி வருகிறார்கள். மேலும் நடிகர் விஜயின் 103 வயது பாட்டியின் புகைப்படம் என்று ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Categories

Tech |