ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்ததில் நிலை தடுமாறி சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் நீங்கா அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிமுக திமுக, பாமக அமமுக கட்சிகள் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். ரசிகர் மன்றத்தில் இருந்து யாரும் பேனர் வைக்க வேண்டாம் என்றும், பேனர் வைக்கவில்லை என்பதை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார் .