Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சூர்யா ரசிகர்கள் நூறு நாட்களுக்கும் மேலாக செய்த சாதனை…!

நடிகர் சூர்யாவின் நற்பணி மன்றம் சார்பில் கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக உணவு அளித்து சாதனை படைத்துள்ளனர்.

நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர்களில் ஒருவர். சமீபத்தில் சுதா கே.பிரசாத் முக்கிய “சூரரை போற்று” படத்தில் நடித்து  படம் வெளிவர காத்திருக்கின்றார். மேலும் வாடிவாசல், இரும்பு கை மாயாவி போன்ற பல படங்கள் கைவசம் வைத்துள்ளார். நடிகர்களின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலமாக பல நற்செயல்களை செய்து வருவது வழக்கமாக உள்ளது.

 

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு தொடங்கி 100 தினங்களாக வடசென்னை மாவட்டத்தில் உள்ள நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் அம்மாவட்டத்தின் திரு.வீ.கா மண்டலத்திற்கு உட்பட்ட இடங்களான பெரம்பூர் பேருந்து நிலையம், பெரம்பூர் ரயில் நிலையம், ஜீவா ரயில் நிலையம், அயனாவரம், ஜமாலியா, புளியந்தோப்பில், மாதவரம் பைபாஸ், மூலகடை போன்ற பகுதிகளில் வீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு கடந்த 100 நாட்களாக தினமும் மதியம் மற்றும் இரவு உணவுகளை சூர்யா நற்பணி இயக்கத்தைச் சார்ந்த நபர்களின் தலைமையில் வழங்கி வருகின்றனர். நேற்று நூறாவது நாள் என்பதால் தெருவில் வசித்துவரும் மக்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.100 நாட்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கியுள்ளனர். தற்சமயம் அதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |