நேற்று சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது சபரிமலை விவகாரம் பற்றியும் , ஐயப்பனை பற்றியும் பேசி வாக்கு சேகரிபில் ஈடுபட்டார். சபரிமலை விவகாரத்தை சொல்லி தேர்தலில் பிரசாரம் செய்யக் கூடாது என்று கேரள மாநில தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி ராம் மீனா, தடை விதித்திருந்த நிலையில் சுரேஷ் கோபி பேசியது தேர்தல் விதிமீறல் என்று பிறக்கட்சிகள் புகார் செய்தன. இதையடுத்து நடிகர் சுரேஷ் கோபி இது குறித்து முறையான விளக்கத்தை 48 மணி நேரத்துக்குள் அளிக்க வேண்டுமென்று திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அனுபமா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Categories
சபரிமலை தொடர்பாக நடிகர் சுரேஷ் கோபிக்கு ஆட்சியர் நோட்டீஸ்….!
