மாடு இல்லாததால் மகள்களை வைத்து உழவு செய்த விவசாயிக்கு நடிகர் சோனு சூட் டிராக்டர் வாங்கி அனுப்பியுள்ளார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த நாகேஸ்வரராவ் என்பவர் தக்காளி விவசாயம் செய்து வந்தார். ஊரடங்கு காரணத்தினால் வாழ்வாதாரம் அதிக அளவு பாதிக்கப்பட்ட இவர் தற்போது பருவமழை காலம் என்பதால் அதனை விவசாயத்திற்கு பயன்படுத்த முடிவெடுத்தார். ஆனால் கையில் பணம் இல்லாத காரணத்தால் வயலில் ஏர் பூட்ட வாடகைக்கு மாடு வாங்க முடியவில்லை. ஆனாலும் விவசாயி பின்வாங்காமல் தனது இரண்டு மகள்களையும் ஏறு பூட்டி தனது நிலத்தில் உழவு செய்தார்.
இதைப் பார்த்த ஊர்மக்கள் படிக்கும் பிள்ளைகளை மாடுகள் போல் நடத்துவது தவறு என கண்டித்துள்ளனர். ஆனால் நிலத்தை தாயாக மதித்த அவருக்கு அது சிறிதும் தவறாக தெரியவில்லை. இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது இதனை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில் உங்களது நிலத்தை உழவு செய்ய இன்று மாலைக்குள் டிராக்டர் ஒன்று வந்துவிடும் என குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று இன்று மாலை விவசாயின் வீட்டிற்கு புதிதாக டிராக்டர் ஒன்று போய் சேர்ந்தது. சோனு வின் இத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
This family doesn’t deserve a pair of ox 🐂..
They deserve a Tractor.
So sending you one.
By evening a tractor will be ploughing your fields 🙏
Stay blessed ❣️🇮🇳 @Karan_Gilhotra #sonalikatractors https://t.co/oWAbJIB1jD— sonu sood (@SonuSood) July 26, 2020