நடிகர் சிம்பு தன் திருமணம் பற்றி மனம் திறந்து கூறிய தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்றது. மேலும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சார்பில் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிம்புவின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைப்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
இந்நிலையில், சிம்பு எனக்கு இதுபோன்ற பெண் தான் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். அதாவது, நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் குணம் சிம்புவை அசரச் செய்திருக்கிறது. அதாவது, சிம்பு, யுவன் சங்கர் ராஜாவிடம் எவ்வளவு கோபப்பட்டாலும், அவரை தொந்தரவு செய்து கொண்டே இருந்தாலும், பதிலுக்கு அவர் ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக கொடுப்பாராம்.
எனவே, அவரைப் போன்று குணமுடைய ஒரு பெண் தனக்கு மனைவியாக கிடைத்தால் நல்லாயிருக்கும் என்றுகூறியிருக்கிறார். இதை அறிந்த ரசிகர்கள், “உங்க ஆசைப்படி உங்களுக்கு மனைவி கிடைக்கும்” என்று கருத்து பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.