நடிகர் ரஜினிகாந்த் சினிமா தொழிலாளர்களுக்கு ரூ 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்து மிரட்டிவருவதால் மக்கள் அனைவருமே அச்சத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் திரைத்துறையை முடங்கியுள்ளது. படப்பிடிப்பு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சினிமா தொழிலாளர்கள் அனைவரும் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பெப்சி தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு அனைத்து நடிகை மற்றும் நடிகைகள் உதவ முன்வரவேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் நிதியுதவி செய்திருந்தனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சினிமா தொழிலாளர்களுக்கு 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.