கடந்த 15 ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களை முழுமையாக விசாரிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரூப்-1 தேர்வு என்னும் ஒரு போட்டித்தேர்வு உண்டா இல்லையா என்பதே பலகாலம் மறைக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்க முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டுமெனில் குறைந்தது இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்களை எடுத்து அதனை ஆராய வேண்டும்.
இதன் மூலமாகத்தான் முழுமையான முறைகேடுகளை கண்டறிய முடியும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எல்லா நடிகர்-நடிகைகள் தொன்றுதொட்டு வரி செலுத்தாமல் தான் இருந்து வருகிறார்கள். இதற்கு ஒரு அரசியல் சாயம் பூசுவது சரியாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.