தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கார்த்தி. தனது முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்த கார்த்தி அடுத்தடுத்து நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ் மித்ரன் இயக்கியிருந்தார்.அதன்பிறகு சர்தார் திரைப்படத்தில் ராசி கண்ணா, லைலா, ரெஜிஷா விஜயன், சங்கி பாண்டே உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். கடந்த 21-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசான சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபீஸ் செல்லும் வசூல் மழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் சர்தார் திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் உலக அளவில் 55 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்ததாக கூறப்படுகிறது. மேலும் சர்தார் திரைப்படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவதால், பெரிய அளவில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.