Categories
உலக செய்திகள்

25 வருடங்களுக்கு முன்…. பிரிட்டன் மகாராணி முன் பேசிய வசனம்… கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை…!!!

நடிகர் கமலஹாசன், பிரிட்டன் மகாராணி முன் தன்னாட்டை குறித்து பேசிய வசனத்தை குறிப்பிட்டு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசனின் மருதநாயகம் என்னும் திரைப்பட தொடக்க விழாவிற்கு, பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் சென்றார். சுமார் 25 வருடங்களுக்கு முன் நடந்த அந்த படப்பிடிப்பில், மகாராணியாரின் முன் தன் நாட்டை பற்றி கமலஹாசன் பேசும் வசனம் படமாக்கப்பட்டது.

அந்த காட்சியில் அவர், பேசியிருந்த வசனத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட கமலஹாசன், “அந்த வசனம் திரைப்படத்திற்காக எழுதியது அல்ல. என் மனதில் இருந்த தீ. அது இன்னும் அணையவில்லை. பன் நெடுங்காலங்களாக தங்கள் இன்னுயிர், சொந்த வாழ்க்கையை இழந்து போராடி பெற்ற இந்த சுதந்திரம், நமது வரலாறு. வீரம் மற்றும் தியாகம் யாவருக்கும் உரியது. வளர்த்துக் கொள்வோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |