நடிகரும், மக்கள் நீதி மையத் தலைவருமான கமலஹாசன் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இதற்கு முன்னதாக அவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வரும் ஹைதராபாத்தில் இருக்கக்கூடிய திரைப்பட இயக்குனர் விஸ்வநாதன் அவர்களை சந்தித்து விட்டு சென்னை வந்திருந்த நிலையில்,
வீட்டிலிருந்த நேரத்தில் திடீரென அவருக்கு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் ஏற்பட்டதாகவும் இதுகுறித்து சிகிச்சை பெறுவதற்காகவும், பரிசோதனை செய்வதற்கும் சென்னை போரூரில் அமைந்திருக்கக்கூடிய ராமச்சந்திரா தனியார் மருத்துவமனைக்கு சென்றவரை பரிசோதித்த மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற மருத்துவ அறிவுறுத்தலின்படி,
அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்தனர். இந்தநிலையில் சற்று முன்னதாக நலமடைந்த கமல் வீடு திரும்பினார் என்ற ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே நேற்றுமுன்தினமே அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் என்ற தகவல் வந்ததை அடுத்து, மருத்துவமனை சார்பாக, நடிகர் கமல் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார் என்று ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இருந்த நிலையில் நடிகர் கமலஹாசன் சற்று முன்னதாக உடல் நலம் தேறி வீடு திரும்பி உள்ளார்.