கடந்த இரண்டு வருடங்களை போல இந்த வருடம் கொரோனா பாதிப்பு அந்த அளவிற்கு இல்லை என்றாலும் கொரோனா ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாகவே இருக்கிறது. எனவே எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு சார்பாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தாலும் மக்கள் அதை குறைத்து விட்டனர் என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று மாலை தனக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளதாகவும், வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். மேலும் தன்னை சந்தித்தவர்களையும் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்