இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் விக்ரம் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தற்போது 3 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கடந்த 1978-ம் ஆண்டு பிரபல பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகள் சுமார் 10 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த நிலையில், கடந்த 1988-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன் சாரிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கமல் மற்றும் சாரிகா கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். நடிகர் கமலுக்கு தற்போது ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்ற 2 மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் முதல் மனைவியான வாணி கணபதியின் தற்போதைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படம் தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.