நடிகர் தனுஷ் தற்போது சென்னையில் இருக்கும் தன் பெற்றோருடனும் அண்ணன் செல்வராகவனின் குடும்பத்தினருடனும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்தது, திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் தனுஷும் ஐஸ்வர்யாவும் அவர்களின் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர்.
#Maaran @dhanushkraja with brother @selvaraghavan’s kids and @GitanjaliSelva pic.twitter.com/M6Hzd5fy75
— sridevi sreedhar (@sridevisreedhar) January 29, 2022
இந்நிலையில் நடிகர் தனுஷ் வாத்தி திரைப்பட படப்பிடிப்பிலிருந்து ஓய்வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் தன் பெற்றோர்களுடன் தங்கியிருப்பதாகவும், தன் சகோதரரும் இயக்குனருமான செல்வராகவனின் குடும்பத்தினரோடு அதிக நேரம் செலவழிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. தற்போது அந்த புகைப்படம் வெளியாகியிருக்கிறது.