விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” தொடரில் நாயகனாக நடித்து வரும் நடிகர் தீபக்கிற்கு, இவ்வளவு பெரிய மகனா? என்று ரசிகர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள்.
சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், நடிகராகவும், வலம் வரும் தீபக், தயாரிப்பாளராக உள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடரின் மூலம் பிரபலமானார். மேலும் விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
https://www.instagram.com/p/CSuLWELBpPZ/
அதன் பின்பு, 2 வது சீசனை தொகுத்து வழங்கினார். மேலும், “இவனுக்கு தண்ணில கண்டம்” என்ற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்தார். தற்போது, விஜய் தொலைக்காட்சியில் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் நாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில், இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன் மனைவி மற்றும் மகனுடன் எடுத்த பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், தீபக்கிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? என்று ஆச்சர்யப்படுகிறார்கள்.