நடிகர் ஆர்யா வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா துறை கொரோனாவால் முடங்கியுள்ள நிலையில் திரைப்படங்களை போலவே ஆக்ஷன், மர்மம், காதல், பிரம்மாண்டம் என ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் அதில் சினிமாவை விட நடிகர்-நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக வெப் தொடரில் நடிக்க முன்னணி நடிகர், நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி தற்போது வெப் தொடரில் நடிகர் ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குனர் மிலிந்த் ராவ் நடிகர் ஆர்யா நடிக்கும் தொடரை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.