Categories
சினிமா

நடிகர் புனீத் ராஜ்குமார் வீட்டில் அஜித்…. வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் அஜித்குமார் காலமான நடிகர் புனீத் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்ற புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கலக்கி வந்த நடிகர் புனீத் ராஜ்குமார் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 30 திரைப்படங்களுக்கும் மேல் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் நடிகர் மட்டுமின்றி பாடல், தயாரிப்பு மற்றும் தொகுப்பாளர் போன்ற பன்முக திறமையுடன் வலம் வந்தார்.

இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் புனீத் ராஜ்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே மரணமடைந்தார். இச்செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, உலகநாயகன் கமலஹாசன், நடிகர் சூர்யா, விஷால் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற பல நடிகர்கள் புனீத் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். இந்நிலையில் நடிகர் அஜித் குமார் தற்போது, புனீத் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், அவர் புனீத் ராஜ்குமார் வீட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |