கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.
இந்தியாவில் கோரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதுவரை இந்த வைரசால் 114 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அதேபோல தமிழக முதல்வர் பழனிசாமியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவியளிக்க கோரிக்கை வைத்தார்.
அரசின் வேண்டுகோளின் படி, மத்திய மற்றும் மாநில அரசுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், மாநில அரசுக்கு 50 லட்சம் ரூபாயும், பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்சம் என மொத்தம் 1.25 கோடி வழங்கியுள்ளார் தல அஜித் குமார். தமிழ் சினிமா துறையில் கொரோனா தடுப்பு நிதிக்கு நடிகர் ஒருவர் கொடுத்த அதிக தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.