Categories
சினிமா தமிழ் சினிமா

அட.. நடிகர் ஆரியின் மாணவரா இவர்..? சார்பட்டா டான்சிங் ரோஸ் குறித்து வெளியான தகவல்..!!

சார்பட்டா திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சபீர், நடிகர் ஆரி அர்ஜுனனின் மாணவர் என்று தெரியவந்துள்ளது. 

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே அதிக பிரபலமடைந்த நடிகர் ஆரி  அர்ஜுனன், தமிழ் திரையுலகில் ரெட்டச்சுழி என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர். இவர் நடிப்பு மட்டுமின்றி பல சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 31 மற்றும் ஆகஸ்டு 1 போன்ற தேதிகளில் எல்.வி.பிரசாத் பிலிம் மற்றும் டிவி அகாடமியை சேர்ந்த மாணவர்களுக்கு நடிப்பு கற்றுக்கொடுத்துள்ளார்.

இதில் 35 க்கு அதிகமான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது நடிகர் ஆரி பேசியதாவது, எல்.வி.பிரசாத் பிலிம் மற்றும் டிவி அகாடமியில் இந்த வருடம் தான் நடிப்பு பயிற்சி ஆரம்பித்திருக்கிறது. இந்த முதல் வருட மாணவர்களே வருங்காலங்களில் வெள்ளித்திரையில் மிளிர போகும் நட்சத்திரங்கள் என்று பேசினார்.

மேலும், அவர் கூறுகையில், தற்போது வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில், டான்சிங் ரோஸ் வேடத்தில் நடித்தவர் என் மாணவர். அவரை திரையில் பார்த்ததும் அதிக மகிழ்ச்சியடைந்தேன் என்று கூறியிருக்கிறார். நடிகர் ஷபீர், டான்சிங் ரோஸ் வேடத்தில் நடித்திருந்தார். அவரின் நடிப்பு அதிக அளவில் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |