பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரசிகர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வரும் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ‘ராதே’. இத்திரைப்படம் ஓடிடியில் வெளியான சில மணி நேரங்களிலேயே திருட்டு இணையத்தளத்திலும் வெளியாகியுள்ளது. ஆகையால் ரசிகர்கள் பலரும் ஓடிடி தளத்தில் பணம் செலுத்தி பார்க்காமல் திருட்டு இணையத்தளத்தில் பார்த்து வருகின்றனர்.
இச்செய்தி ராதே திரைப்படக்குழுவினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இப்படத்தின் நாயகனான சல்மான்கான் சட்டவிரோதமாக ராதே திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, ராதே திரைப்படத்தை 249 ரூபாய் கட்டணம் செலுத்தி நியாயமாக பார்க்க வேண்டும்.
ஆனால் தற்போது திருட்டு இணையத்தில் வெளியிட்டு இருப்பது மிகப்பெரிய குற்றமாகும். இப்படி சட்டவிரோதமாக செயல்பட்டு வருபவர்களுக்கு எதிராக சைபர் கிரைம் போலீசார் நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்வார்கள். இப்படிப்பட்ட திருட்டு இணையத்திலிருந்து ரசிகர்கள் யாரும் படங்களை பார்க்க வேண்டாம். இதை மீறி செயல்பட்டால் ரசிகர்கள் மீதும் சைபர் கிரைம் போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.