Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகள் பொதுத்தேர்வுக்காக சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்!

தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது, ” 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என தெரிவித்துள்ளார். தேர்வுக்கு முன் மாணவர் சேர்க்கையை நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி துவங்கும் முன்பே தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், சென்னை, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 12ம் வகுப்பு விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகிற ஜூன் 15ம் தேதி தொடங்க உள்ளது.

இதன் காரணமாக, தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்படுவதால் பள்ளி வளாகங்களை தூய்மை படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், இ-பாஸ் வசதி மூலம் மாணவர்களை தேர்வு மையங்களுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மறுபுறம், கொரோனா அச்சறுத்தல் காரணமாக தேர்வினை ஒத்திவைக்கவேண்டும் என பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு வருகிறது.

Categories

Tech |