நடிகர் அர்ஜுனின் திருமண புகைப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் ஆக்சன் கிங்காக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன் . இவர் நடித்த படங்களின் ஆக்சன் காட்சிகளை ரசிகர்கள் இன்றளவும் விரும்பி பார்த்து வருகின்றனர். ஒரு காலத்தில் கதாநாயகனாக நடித்து வந்த இவர் தற்போது சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார் .
https://twitter.com/aishwaryaarjun/status/1358744099709325312
இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா நேற்று ட்விட்டரில் தனது அம்மா, அப்பாவிற்கு திருமண நாள் வாழ்த்து கூறியுள்ளார் . மேலும் அவர் நடிகர் அர்ஜுனின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் . தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .