சாதனைப்பெண் சீமா தாகாவின் புதிய வெப் தொடர் உருவாகவுள்ளது.
டெல்லியில் உள்ள சமயபூர் பத்லி காவல்நிலையத்தில் ஹெட் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் சீமா தாகா. இவர் கடந்த வருடம் காணாமல் போன 76 குழந்தைகளை 3 மாதத்திற்குள் கண்டுபிடித்துள்ளார். இதனால் அவரின் திறமையை பாராட்டி அவருக்கு துணை ஆய்வாளர் பதவி வழங்கப்பட்டது. சீமா கல்லூரியில் படித்தபொது காவல் ஆய்வாளர் நேர்காணலில் மூலம் போலீஸ் வேலையில் சேர்ந்தார்.
20 வயதிலிருந்து அவர் காவல் துறையில் பணிபுரிகிறார். இந்நிலையில் இவர் செய்த சாதனையை பாராட்டும் விதமாக ஒரு புதிய வெப் தொடர் உருவாக உள்ளது. அதில் சீமா தாகா கதாபாத்திரத்திற்கு யார் நடிக்கப் போகிறார் என்பது குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.