சென்னை துரைப்பாக்கத்தில் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் போக்குவரத்து காவல் துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலை தடுக்கும் பொருட்டு கிடைக்கும் நேரத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் வரை காவல் துறையினரை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான குழு, சாலையில் சிக்னலில் போது நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி வந்துள்ளார். காவல்துறையினரின் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றதோடு மட்டுமில்லாமல் அதிகாரிகளுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.