வாழப்பாடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதியதில் பெண் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெளவுல்ராஜ் இவர் தனது மனைவி ராதிகா மற்றும் குடும்பத்துடன் சேலத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு புதுச்சேரிக்கு சென்றுக் கொண்டிருந்தார்.இந்நிலையில் வாழப்பாடியை அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருக்கும்பொழுது திடிரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி மறு பாதைக்கு சென்று எதிரே வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் காரில் பயணித்த ராதிகா, ராஜீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ,வாகனத்தை ஓட்டிச் சென்ற ராஜன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார் . மேலும் படுகாயம் அடைந்த பெளவுல்ராஜ் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.போலீசாரின் விசாரணையில் ஓட்டுநர் ராஜன் துக்கத்தில் இருந்ததே விபத்துக்கு காரணமாக தெரியவந்துள்ளது.