Categories
உலக செய்திகள்

பாலாறாக மாறிய ஆறு…. ஆற்றில் கவிழ்ந்த டேங்கர் லாரி…. வலைத்தளங்களில் வைரலான வீடியோ….!!

பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஆற்றில் கவிழ்ந்ததால் பாலாறு போன்று காட்சியளித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் தென்கிழக்கு வேல்ஸ் பகுதியில் டூ லைஸ் ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் அருகில் சாலை அமைந்துள்ளது. அந்த சாலை வழியாக பால் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி சென்றுள்ளது. அந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி ஆற்றில் தவறி விழுந்துள்ளது. இதனால் டேங்கரில் இருந்த பால் ஆற்றில் கலந்துவிட்டதால் டூ லைஸ் ஆறு முழுவதும் பாலாறு போன்று காட்சியளித்தது.

மேலும் விபத்துக்குள்ளான லாரியை ஓட்டி வந்த டிரைவர் சிறிய காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். பின்னர் நீண்ட நேரத்திற்குப் பிறகு டேங்கர் லாரி ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாலாறாக மாறியதை அப்பகுதி பொதுமக்கள் வியப்புடன் பார்த்து புகைப்படம் எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |