Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அமைதியா போயிட்டு இருந்த மின்வாரிய ஊழியர்…. எதிரே வந்த பேருந்து…. எதிர்பாராமல் ஏற்பட்ட பெரும் இழப்பு….!!

மின்வாரிய ஊழியர் பஸ் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கிராமத்தைச் சார்ந்தவர் நல்லப்பன். இவர் மின்வாரியத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை கீழப்பழுவூர் பஸ் நிலையம் அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பஸ் அவரது வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த நல்லபனை அருகில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |