லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் மதனத்தூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே நின்று வாலிபர் ஒருவர் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். இந்நிலையில் கும்பகோணம் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கோவில் சுவற்றின் மீது வேகமாக மோதியது. அதில் கோவில் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.
மேலும் நான்கு பேர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பழூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் உயிரிழந்த வாலிபர் ஜெயங்கொண்டம் பகுதியில் வசித்து வந்த செல்வகுமார் என்பது தெரியவந்தது.