2 கார் விபத்துக்குள்ளானதில் 4 காவல்துறையினர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் அழகர்சாமி என்பவர் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு தனது காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென காரின் பின் டயர் வெடித்து பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் என்ற பகுதியில் உள்ள தடுப்பு சுவர் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இதையடுத்து பின்னால் வந்து கொண்டிருந்த கடலூர் புவனகிரி போலீஸ் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் கார்த்தி, கமலா, அன்பரசு மற்றும் காவல் ஆய்வாளர் ராபின்சன் ஆகியோர் வந்து கொண்டிருந்த கார் விபத்தில் நின்றுகொண்டிருந்த காரின் மீது வேகமாக மோதியது. இதில் இரண்டு கார்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளது. அந்த காரில் இருந்த காவல்துறையினர் நால்வருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் அவர்கள் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.