சாலையை கடக்க சென்ற மூதாட்டி கார் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆபாய் தெருவில் 65 வயதான நாகம்மாள் என்னும் மூதாட்டி வசித்து வந்தார். அவர் அதே பகுதியில் வீட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது அங்கு வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் மீது மோதியது.
அதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பத்தூர் காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.