Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஒரே மோட்டார் சைக்கிளில் மூவர்… வளைவில் நின்ற மின்கம்பம்… தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள்…!!

மின்கம்பத்தின் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள எட்டிவயல் கிராமத்தைச் சார்ந்தவர் சிதம்பரம். இவருடைய மகன் மணிகண்டன். அதே பகுதியைச் சார்ந்த மருதுவின் மகன்கள் மணிகண்டன் மற்றும் சக்திவேல். இந்த மூவரும் பட்டுக்கோட்டையில் உள்ள முருகன் கோவிலில் நடந்த திருமணத்திற்காக வந்து விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றுள்ளனர். அவர்கள் கொட்டகுடி அய்யனார் கோவில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் வளைவில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியதால் மூவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

இதில் சக்திவேலை தவிர மற்ற இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அந்த வழியாக சென்றவர்கள் சக்திவேலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |