இருசக்கர வாகனம் தொழிலாளி மீது மோதிய விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள மடிகை கிராமத்தை சார்ந்தவர் ரத்தினம். இவர் கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த 29 ஆம் தேதி காலை பட்டுக்கோட்டை சாலையில் நடந்து சென்றுள்ளார். ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் ஊழியராக பணிபுரியும் சிவகுமார் என்பவர் நேற்று முன்தினம் காலை ஒரத்தநாடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சாலையின் ஓரமாக நடந்து கொண்டிருந்த ரத்தினத்தின் மீது சிவகுமாரின் இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் சிவகுமார் பலத்த காயம் அடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்தினத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிவாகுமார் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.