இத்தாலியிலுள்ள தீவு ஒன்றில் பூமிக்கடியில் செல்லும் எரிவாயு குழாயில் திடீரென ஏற்பட்ட கசிவில் தீப்பொறி பட்டு வெடித்து சிதறியதில் அருகிலிருந்த 2 அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது.
இத்தாலியில் சிசிலி என்னும் தீவு அமைந்துள்ளது. இந்த தீவிலுள்ள பூமிக்கடியில் செல்லும் எரிவாயு குழாயில் திடீரென கசிவு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் அருகிலிருந்த லிப்டை பயன்படுத்திய போது அதிலிருந்து ஏற்பட்ட தீப்பொறி காற்றின் மூலம் எரிவாயு குழாய் கசிவில் பட்டுள்ளது.
ஆகையினால் எரிவாயு குழாய் சரமாரியாக வெடித்து சிதறியுள்ளது. இதனால் அருகிலிருந்த 2 அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மேலும் ஈடுபாடுகளில் சிக்கித் தவிக்கும் 5 பேரை மீட்கும் பணியில் பாதுகாப்பு குழுவினர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.