Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த விபரீதம்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்… போலீஸ் விசாரணை..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவேகம்பத்தூரில் வசித்து வரும் மணி என்பவர் சருகணி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவேகம்பத்தூர் ஆற்றுப்பாலத்தில் அந்த கார் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்தது. அந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மணி உயிர் தப்பினார்.

இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருவேகம்பத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |