Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! முதியவருக்கு நடந்த விபரீதம்… போலீஸ் வலைவீச்சு..!!

பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புறநகர் துறைமங்கலம் பயணியர் பங்களா பேருந்து நிறுத்தம் முன்பு சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த முதியவர் மோதியதில் அவர் பலத்த காயங்களுடன் சாலையோரத்தில் கிடந்துள்ளார். அதனைக் கண்ட பொதுமக்கள் ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் அந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அந்த முதியவர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிள் உரிமையாளரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |