கர்நாடகா மாநிலத்தில் பள்ளத்தில் விழுந்த யானையை ஜேசிபி இயந்திரம் மூலம் காப்பாற்றிய போது மீண்டு எழுந்த யானை துள்ளி குதித்து காட்டுக்குள் ஓடிய சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடகா மாநிலம் கூர்க்கில் பள்ளம் என்ற இடத்தில் யானை தெரியாமல் தவறி விழுந்து அங்கிருந்து மீளமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தது. இதை கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து வனத்துறையினர் அங்கு வந்து ஜேசிபி இயந்திரத்தை வைத்து யானையின் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது யானை கடும் போராட்டத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பள்ளத்திலிருந்து மேலே எழுந்து உயிர் தப்பியது. உயிர்தப்பிய யானை துள்ளிக்குதித்து காட்டை நோக்கி ஓடிய சம்பவம் மகிழ்ச்சி அடைய வைத்தது. ஜேசிபி இயந்திரம் மூலம் யானையை மீட்கும் இந்த வீடியோவானது ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகின்றது.
https://twitter.com/sats45/status/1394866990309789701