Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்… மருத்துவமனையில் திடீர் ஆய்வு… மருத்துவர்களுடன் நடைபெற்ற ஆலோசனை…!!

கொரோனா 3ஆம் அலைக்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இயக்குனர் நாமக்கல் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா 3 அலை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் ஆகியவை மாவட்டத்தில் உள்ள 8 அரசு மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் குருநாதன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைகளில் கொரோனா 3ஆம் அலைக்கான தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய அவர் மாவட்ட முதன்மை மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தற்போது கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் 374 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் தயாராக உள்ளது. மேலும் கொரோனா தவிர்த்து இதர பிரிவுகளில் கீழ்வரும் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், பிரசவம் மற்றும் குழந்தைகள் பிரிவுகளில் அளிக்கப்படும் சிகிச்சைகள் மிகவும் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்காக திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம் ஆகிய 3 மருத்துவமனைகளுக்கு டயாலிசிஸ் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குருநாதன் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் போது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் முன்னாள் இயக்குனர் இன்பசேகரன், நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், தேசிய குழும திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன், 8 அரசு மருத்துவமனைகளின் முதன்மை மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்துள்ளனர்.

Categories

Tech |