பிலிப்பைன்ஸ் நாட்டை பயங்கரமாக தாக்கிய ‘ராய்’ சூறாவளியால் சுமார் 1 லட்சம் மக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டை பயங்கரமாக தாக்கிய ‘ராய்’ சூறாவளியால் சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மேலும் மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் தெற்கு பிலிப்பைன்ஸில் பலத்த சூறாவளி காற்று வீசியது. அதனை தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் தெற்கு பிலிப்பைன்ஸில் சூறாவளி காரணமாக ரயில், படகு, சாலை என அனைத்து போக்குவரத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டது. அதேபோல் விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிலிப்பைன்சில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை சுமார் 15 புயல் அந்நாட்டை தாக்கியது குறிப்பிடத்தக்கது ஆகும்.