Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பாடா! ஒரு வழியா வெளியானது “வலிமை” அப்டேட் – ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

வலிமை படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் தல ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

தல அஜித் அவர்களின் நடிப்பில் வெகுகாலமாக உருவாகி வரும் படம் வலிமை. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உருவாக்கியுள்ளார். இந்த படம் சதுரங்க வேட்டை, நேர்கொண்டபார்வை உள்ளிட்ட படங்களை இயக்கிய தயாரிப்பாளர் வினோத் உருவாக்கியுள்ளார். இந்நிலையில் தளபதி ரசிகர்களுக்கு தளபதி விஜய் அவ்வப்போது மாஸ்டர் படத்தின் அப்டேட் கொடுத்து சந்தோஷப்படுத்தி வந்தார். ஆனால் தல படத்துக்கு பூஜை போட்டதோடு சரி எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இதையடுத்து வலிமை படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இதையடுத்து ஜனவரிக்குள் படத்தை முடித்து அஜித்தின் 50வது பிறந்த நாளான மே 1 திரையரங்குகளுக்கு படத்தை கொண்டுவர படக்குழு கடுமையாக உழைத்து வருகிறது. தற்போது உருவாகி வரும் இப்படத்தின் மனதை உருக வைக்கும் அம்மா சென்டிமென்ட் காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த படத்தில் அஜித்தின் தாயாக நடிகை சுமித்ரா நடித்துள்ளார். இவர் 90களில் சிவாஜி, சிவகுமார், கமல்ஹாசன், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |