Categories
மாநில செய்திகள்

“ஆவின் மோசடி”….. 45 நாட்களுக்குள் தமிழக காவல்துறை….. சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவால் வசமாக சிக்கிய அதிமுக மாஜி….!!!!!!

தமிழகத்தில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கோடி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வந்த போது கே.டி ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் ஜாமீன் வழங்கியதோடு வழக்குப்பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய எல்லையை தாண்டக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.

அதன் பிறகு தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் கேடி ராஜேந்திர பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 4 வார காலங்களுக்கு நீடித்ததோடு தமிழகம் முழுவதும் பயணம் செய்யலாம் என்றும் பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொள்ளலாம் கோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும், நாடு முழுவதும் பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேடி ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாமீன் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் எனவும், தமிழ்நாடு ‌ அரசிடம் இது தொடர்பாக ஆலோசனை பெற வேண்டும் எனவும் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி 45 நாட்களுக்குள் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது தமிழக காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்

Categories

Tech |