பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தருகின்றனர் . இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ வில் சிவானி ஸ்டோர் ரூம் வழியாக சர்ப்ரைசாக என்ட்ரி கொடுக்கிறார் . அவரைப் பார்த்த மற்ற போட்டியாளர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து அவரை கட்டி அணைத்து வரவேற்கின்றனர்.
#Day103 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/ALQk6QOKnv
— Vijay Television (@vijaytelevision) January 15, 2021
ஷிவானியின் வருகையை அறிந்த பாலா அவரைக் காண ஆவலுடன் வருகிறார் . ஆனால் சிவானி அவரைக் கண்டுகொள்ளாமல் நேராக அர்ச்சனாவை சென்று பார்க்கிறார். இதனால் சோகத்தில் ஒதுங்கி விலகுகிறார் பாலா . இதையடுத்து பாலாவுடன் ஷிவானி பேசுகிறாரா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .