ஆற்றில் மிதந்த காரில் இருந்து இரண்டு சடலங்களை மீட்ட காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கடந்த 1ஆம் தேதி பிரிட்டனில் உள்ள Hoveringham என்ற கிராமத்தில் அருகில் உள்ள டிரென்ட் என்ற ஆற்றில் கார் ஒன்று மிதப்பதாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் காரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் காவல்துறையினரால் மீட்க முடியவில்லை.
இதனைத் அடுத்து நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு ஆற்றிலிருந்து கார் மீட்கப்பட்டது.பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட பரிசோதனையில் காரின் உள்ளே ஆண் பெண் இருவர் சடலம் இருப்பதை கண்டறிந்தனர். ஆனால் அவர்கள் இருவரின் அடையாளங்களும் தெரியாததால் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.