Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

மருத்துவ குணங்களா..? ஆமாங்க..ஆட்டுக்கறியில் பல நன்மைகள்..!!

ஆட்டுக்கறியில் மருத்துவ குணங்களா..? ஆமாங்க..

நாம் சாப்பிடும் ஆட்டுக்கறியில் எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கின்றது, என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்:

ஆட்டுக்கறியில் சிறப்பான மருத்துவ நன்மைகள் இருக்கிறது. இவை சாப்பிடுவதால் வாயு, அஜீரணம் உண்டாகும், அதனால் தான் நாம் சமைக்கும் பொழுது உணவில் சீரகம், மிளகு சேர்த்து கொள்கிறோம்.

ஆட்டின் தலை:

நம்முடைய இதயம் சம்மந்தமான பிரச்சனையை தீர்க்கும், குடலை பலம் ஆக்கும், கபால பிரச்சனையும் தீர்த்து விடும்.

கழுத்துக்கறி:

கழுத்து கறியில் கொழுப்பு இருக்காது, இந்த கறியை வயதானவர்களும், குழந்தைகளும் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருக்கும், ஏன் என்றால் அந்த கறி சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும்.

ஆட்டின் கண்:

கண் பார்வை தெளிவாக தெரியும். கண்ணுக்கும் பலம் கொடுக்கும்.

ஆட்டின் மார்பு:

நம்முடைய மார்பகத்தில் புண் ஏதேனும் இருந்தால் அவற்றை ஆற்றிவிடும். மார்பை பலமாக்கும்.

ஆட்டின் இதயம்:

மன தைரியம் உண்டாகும், இதயத்தை பலமாக்கும், மன ஆற்றலை அதிகரிக்கும்.

ஆட்டின் நாக்கு:

உடல் சூட்டை குறைக்கும். உடலின் தோலை பளபளப்பாக்கும், பொலிவுடன் வைக்கும்.

ஆட்டின் மூளை:

புத்தி தெளிவாக சீரடையும், கண்ணை  குளிர்ச்சியாக வைத்திருக்கும். நினைவாற்றல் திறம் அதிகமாகும். நம் மூளையின் பாகங்களை பலப்படுத்தும்.

ஆட்டின் நுரையீரல்:

உடலின் வெப்பத்தை ஆற்றிக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு மிகுந்த வலு தரும்.

ஆட்டுக் கொழுப்பு:

இடுப்பு வலி குறையும், இடுப்பு எலும்பு உறுதி பெரும், எல்லா வித ரணத்தையும் போக்கிவிடும்.

ஆட்டுக்கொழுப்பு:

அம்மை மற்றும் அக்கி நோய்களுக்கு ஏற்ற தீர்வு.

ஆட்டுக்கால்கள்:

எலும்புக்குப் பலம் தரும். தைரியம் ஏற்படுத்தும். கால்களுக்கு ஆற்றல் தரும்.

ஆட்டுக் குடல்:

நம் குடலில் ஏதேனும் புண் இருந்தால், அதற்கு ஆட்டின் குடல் சமைத்து சாப்பிட்டால் குடல் புண் ஆற்றிவிடும்.

Categories

Tech |