Categories
ஆன்மிகம் இந்து

ஆதி சிவனே போற்றி.. அவரின் ஏழு தன்மைகள் பற்றி அறிவோம்..!!

சிவனுடைய ஏழு தன்மைகள் என்ன என்பதைப் பற்றி இப்பொழுது  பார்ப்போம்.

சிவன் எண்ணிலடங்காத பல வடிவங்களும், பரிமாணங்களும் கொண்டவன். அடிப்படையாக இவற்றில் ஏழு விதமான தன்மைகள் ஆக பிரிக்கலாம். இந்த ஏழு தன்மைகளையும் கொண்டுதான் தியானலிங்கம் உருவாக்கப்பட்டது.

*முதலாவது கடவுள், தலைவன் அதாவது ஈஸ்வரன்,

*இரண்டாவது கருணை பாலிக்கும் இஷ்டதெய்வம் சம்போ

*மூன்றாவது எளிய அழகிய தன்மையுடைய சண்டேஸ்வரன்

*நான்காவது வேதங்கள் கற்றறிந்த ஆசான் தக்ஷிணாமூர்த்தி

*ஐந்தாவதாக கலைகளுக்கெல்லாம் தலைமையான நடராஜன் அல்லது நடேசன்

*ஆறாவதாக தடைகளை தகர்த்தெறியும் உக்கிரமான காலபைரவன்

 *ஏழாவது காதல் தரும் சர்வ லட்சணமான பேரழகன் அதாவது சோமசுந்தரம்

சோமசுந்தரம் என்பவருக்கு நிலவை விட அழகானவன் என்பது பொருள். இவையே சிவனுடைய ஏழு தன்மைகள் ஆகும். சிவன் இந்த அடிப்படையான வடிவங்களில் இருந்து தான் எண்ணிலடங்கா வெளிப்பாடுகள் உருவாகி இருக்கிறது. பாரம்பரியமாக இந்த ஏழு தன்மைகளையே மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களை உலகமாக அழைக்கின்றனர். தியானலிங்கத்தின் ஏழு சக்கரங்களும் பிரபஞ்சத்தின் இந்த ஏழு தன்மைகளையே கொண்டுள்ளது.

Categories

Tech |