Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிய ஆசிரியர்…. திடீரென நடந்த சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

ஆசிரியையிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தப்பிள்ளையூர் பகுதியில் பரணி குரூஸ் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோஸ்பின் ராணி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் ஜோஸ்பின் ராணி சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதிக்கு கிறிஸ்தவ ஆலய திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார்.

இந்நிலையில் ஆசிரியர் தனது வீட்டின் முன்பு செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் முகவரி கேட்பது போல் வந்தார். அப்போது திடீரென ஜோஸ்பின் ராணியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து ஜோஸ்பின் ராணி வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நகையை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |