Categories
மாநில செய்திகள்

“ஆரத்தி வரவேற்பு, குழந்தைகளுடன் செல்பி”…. கலைஞர் வீடு, பேரன் பட்டா…. உதயநிதிக்கு சிவகங்கையில் நெகிழ்ச்சி சம்பவம்…!!!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறுகூடல்பட்டி சமத்துவபுரத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்தார். அவரை கலெக்டர் மதுசூதனன் மலர் கொத்துக் கொடுத்து வரவேற்றார். அதன் பிறகு அங்குள்ள பெரியார் சிலைக்கு அமைச்சர் உதயநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை சென்று அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்த போது அங்குள்ள பெண்கள் உதயநிதிக்கு ஆரத்தி எடுத்து திலகமிட்டு  வரவேற்பு கொடுத்தனர். அதன் பிறகு அங்கிருந்த குழந்தைகள் உதயநிதியின் கையை பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்றதோடு அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் உதயநிதியிடம் குழந்தைகள் பூங்கா வேண்டும் என்று கேட்க உடனடியாக அமைச்சரும் பூங்கா அமைத்து தரப்படும் என்று உறுதி கொடுத்தார். இதனையடுத்து அமைச்சர் உதயநிதி பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 100 சமத்துவபுர வீடுகளின்‌ உரிமையாளர்களுக்கு பட்டா ‌ வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் உதயநிதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, கலைஞர் வீடு வழங்கினார். அவருடைய பேரன் நான் பட்டா வழங்குகிறேன்.

கடந்த 10 வருடங்களாக பராமரிப்பின்றி இருந்த 149 சமத்துவபுரங்கள் 200 கோடி நிதி ஒதுக்கீட்டில் சீரமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். இதில் முதல் கட்ட துவக்கமாக சிவகங்கை மாவட்டத்தில் 9 கோடி செலவில் 7 சமத்துவப்புரங்களில் உள்ள வீடுகள் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்று கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

Categories

Tech |