Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஆரியுடன் உரையாடியதில் திருப்தி’… வைரலாகும் சுரேஷ் தாத்தாவின் ட்வீட்…!!!

பிக்பாஸ் வீட்டில் ஆரியுடன் உரையாடியது குறித்து ட்விட்டரில் சுரேஷ் பதிவிட்டுள்ளார் .

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தனர் . கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் வந்த பிறகும் சுரேஷ் தாத்தா பிக்பாஸ் வீட்டிற்குள் வராதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து கடைசி எபிசோடான நேற்று ஒரு சில மணி நேரங்கள் மட்டும் இருக்கும் நிலையில் சுரேஷ் தாத்தா பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டார் . பின்னர் ஷிவானியின் வார்த்தைகளால் மனமுடைந்த பாலாவுக்கு சுரேஷ் ஆறுதல் கூறினார் .

தற்போது சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற அனைத்து போட்டியாளர்களும் வெளியேறியுள்ளனர். இந்நிலையில் சுரேஷ் தாத்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பிக்பாஸ் வீட்டில் எனக்கு கொடுக்கப்பட்ட நேரம் மிகக் குறைவாக இருந்தாலும் அது எனக்கு போதுமானதாக இருந்தது . பிக்பாஸ் வீட்டில் இருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தேன். மேலும் ஆரியுடன் உரையாடியதில் எனக்கு திருப்தி ‘ என பதிவிட்டுள்ளார். தற்போது சுரேஷ் தாத்தாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |