Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரிக்கு வாழ்த்து தெரிவித்த ஷிவானி… டுவிட்டரில் வெளியிட்ட பதிவு…!!!

பிக்பாஸ் சிவானி தனது ட்விட்டர் பக்கத்தில் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .

பிக் பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில் கலந்து கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி நாராயணன் . இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் . மேலும் இவரை சமூக வலைத்தளங்களில் பின்பற்றும் ரசிகர்கள் ஏராளம் . இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவர் மீது ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர் .

https://twitter.com/ActressShivanii/status/1351021952165683208

ஆனால் பெரும்பாலும் அமைதியாகவும் , பாலாஜிக்கு ஆதரவாகவும் இருந்த ஷிவானியின் மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர் . இருப்பினும் கடைசி வாரத்தில் பினாலே டாஸ்கில் சிறப்பாக விளையாடி சிங்கப்பெண் என்ற பெயருடன் வெளியேறினார். இந்நிலையில் சிவானி தனது ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் . அதில் ‘நீங்கள் சாதித்து விட்டீர்கள்’ என பதிவிட்டு ஆரியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |