தலீப்பான் தீவிரவாதிகள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை இரட்டிப்பாக அதிகரித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து தலீப்பான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதனால் ஆட்சி அதிகாரம் தலீப்பான் தீவிரவாதிகளின் வசம் சென்றுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலையை தலீப்பான் தீவிரவாதிகள் இரட்டிப்பாக அதிகரித்துள்ளனர். இதனால் இறக்குமதி செய்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம், பிஸ்தா மற்றும் அத்திப்பழம் உள்ளிட்ட பொருட்களின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுவதாவது “ஆப்கானிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை தலீப்பான் தீவிரவாதிகள் இரட்டிப்பாக்கியுள்ளனர். அதாவது இதுவரை ரூ.500க்கு விற்ற பிஸ்தா பருப்பின் விலை தற்போது ரூ.1000 வரை அதிகரித்துள்ளது. இதேபோல் பிஸ்தா மற்றும் அத்திப்பழம் போன்றவற்றின் விலையும் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டிலிருந்து வரும் இறக்குமதி தவிர்க்கப்பட்டுள்ளது. என கூறியுள்ளார்.