ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிகாரிகளின் வீடுகளிலிருந்து அங்குள்ள மத்திய வங்கிக்கு பெருந்தொகை வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்திய அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். அதாவது தற்போது ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆட்சி நடந்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகின்றது. அதாவது தலீபான்களின் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் மக்கள் உணவுக்காக பல சிரமங்களை சந்தித்து வருகின்றார்கள். மேலும் அந்நாட்டின் பொருளாதாரமும் தொடர்ந்து மோசமடைந்து வருகின்றது. மேலும் தற்போதைய தலீபான்களின் புதிய அரசாங்கம் வெளிநாடுகளின் நன்கொடையை மட்டுமே சார்ந்துள்ளது.
இதன் காரணமாகவே தலீபான்கள் சீனாவிடம் பெரிய முதலீடுகளையும் அமெரிக்காவின் உதவி கரத்தையும் வேண்டியுள்ளது. அதன்பின் சமீபகாலத்தில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகளின் வங்கி கணக்குகளை முடக்க மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கியின் ஆளுநராக ஹாஜி இத்ரிஸ் மாறியதைத்தொடர்ந்து தலீபான்கள் அவரை மத்திய வங்கியின் இடைக்கால தலைவராக பணியமர்த்தியுள்ளனர். இதுக்குறித்து ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே கூறியதாவது ” தலீபான்கள் ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கியின் இடைக்கால தலைவராக பணியமர்த்திய ஹாஜி இத்ரீஸ் மீது பணமோசடி குற்றச்சாட்டு ஏற்கனவே இருக்கின்றது.
மேலும் அவர் தலீபான்களுக்கும் அல்கொய்தாவுக்கும் இடையேயான பணபரிவர்த்தனைக்கு உதவி செய்துள்ளார்” என குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கிக்கு அந்நாட்டின் முன்னாள் அதிகாரிகளின் வீட்டிலிருந்து பல கோடி ரூபாய் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது புள்ளிவிவரங்களின்படி 1,23,68,246 இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிகாரிகளின் வீட்டில் இருந்து எப்போது எப்படி இந்த பணம் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த முழுவிவரங்கள் தற்போது வரை தெரியவில்லை. எனினும் ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கிக்கு பெருமளவு பணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.